அனைவரும் நேற்று, ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபோன் 7 நேற்று வெளியாகிவிட்டது. அதே போல, அதிகாரப்பூர்வமான, முதல் ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 போனையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது L.G நிறுவனம்.முதல் நௌகட் போன் என்பதைத் தவிர்த்து, LG V20-யில் வேற என்ன ஸ்பெஷல்?
உற்பத்தி சிக்கல் மற்றும் Samsung நிறுவனத்தின் S7-ன் போட்டியால் LG-ன் இதற்கு முந்தைய தயாரிப்பான G5 நினைத்த அளவிற்கு இல்லை.ஆனால் தற்போது S7-ல் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் தனக்கு சாதகமாக அமையும் என்று LG நினைக்கின்றது.
V20-ன் வெளியீட்டு விழாவில் "V20,LG நிறுவனத்திற்கு ஒரு திரும்புமுனையாக அமையும்" என்று LG-ன் மொபைல் டிவிஷனின் தலைவர் ச்சோ ஜூனோ கூறியுள்ளார்.
முழுக்க முழுக்க மெட்டல் பாடியிலான இந்த V20, 5.7 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டது, இப்பொழுது வரும் மொபைல்கள் போல், இல்லாமல் இதனுடைய பேட்டரி கழற்றி மாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடியோ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான Bang & Olufsen A/S உடன் இணைந்து இந்த மொபைலின் ஆடியோ சிஸ்டத்தை அமைத்துள்ளனர்.
மற்றும் இது இரட்டை பின் பக்க கேமராக்களை கொண்டுள்ளது,ஒரு 16MP கேமராவுடன்,135 டிகிரி பரப்பளவை படம் எடுக்கக்கூடிய 8MP வைட் ஆங்கிள் கேமராவும் இதில் அடக்கம்.
Qualcomm's Snapdragon 820 ப்ராஸ்ஸருடன் அறிமுகம் ஆகியுள்ள V20 4GB LPDDR4 RAMல் இயங்கவுள்ளது
இதனுடைய இன்பில்ட் மெமரி 64GB, ஆனால் 2GB மெமரிகார்ட் மட்டுமே இதில் கூடுதலாக பயன்படுத்த முடியும்.
இந்த செப்டம்பர் மாத இறுதியில் தென் கொரியாவில் தன் V20 விற்பனையை தொடங்கவுள்ள LG நிறுவனம் அதன் விலையை இன்னும் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment